#BREAKING கதி கலங்கவிடும் கனமழை... “இழுத்து மூடுங்க...” - ஒரே நேரத்தில் கன்னியாகுமரிக்கு டபுள் வார்னிங்...!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து மழையின் நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING “ஒண்ணு இல்ல ரெண்டு...” - தமிழகத்தை சுத்துப்போட்ட 2 புயல் சின்னங்கள்... அதி பயங்கர எச்சரிக்கை...!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்றும் மாவட்டத்திற்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரக் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில், மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்வதற்கான அவசரகால எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாயிடம் டஜன் கணக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள்... சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த திடுக் தகவல்கள்...!