×
 
☰

கடைசி நேரத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா?... “ஸ்கூலுக்கு வராதீங்க”... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!

கடைசி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சி தலைவர் லீலா அலெக்ஸ் அறிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் சூட்டப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இடி, மின்னலுடன் கூடிய மழையும், சில இடங்களில் மணிக்கு 40–50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தூக்கத்தில் நடந்த துக்கம்... ஓங்கி ஒலித்த தாய், மகளின் அலறல் சத்தம்... 12ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட சோகம்..!

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காலை முதலே மழை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் நிலவுவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகள் மற்றும் வானிலை நிலவரத்தை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக இன்று சில இடங்களில் மிக கனமழையும், இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இன்று ஒருநாள் மட்டும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

தற்போது கடைசி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சி தலைவர் லீலா அலெக்ஸ் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பானது விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உருவாகிறதா புதிய புயல்..? - இன்று கடலில் காத்திருக்கும் பேராபத்து... இந்த 26 மாவட்டங்கள் ‘குறி’...!.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share