×
 

என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்..!

என் கணவர் சொல்வதைப் போல, நானும் உங்களில் ஒருத்தி என்று புத்தக வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

திமுக தலைவர் முதலமைச்சருமான மு க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கடந்த ஐந்து வருடமாக நாளிதழ் ஒன்றில் தனது கணவர் குறித்து "தளபதியும் நானும்" என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதி வந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அந்தத் தொடர் தொகுக்கப்பட்டு 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி 'அவரும் நானும்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினின் மணவாழ்க்கை, ஸ்டாலினின் அரசியல் பயணம், நெருக்கடிகள் மிசா கொடுமைகள், ஸ்டாலின் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகள், அவரின் சாதனைகள் உள்ளிட்ட அரசியல் ரீதியான தகவல்களும் குடும்ப நிகழ்வுகள் பற்றியும் சுவாரசியமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் உயிர்மை பதிப்பகத்தால் புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில், கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து உயிரிழந்ததை தொடர்ந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நேற்று புத்தகம் வெளியிடப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் நிகழ்ச்சியோடு பேசினார்.

அப்போது தன் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் ஆனால் மருத்துவமனையில் இருந்தே இந்த நிகழ்ச்சியை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். முதலில் தன் கணவருக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறிய அவர், தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டு வரவேற்றார். உடனே தன் தாய் துணை முதலமைச்சர் எனக் கூறியதை கேட்டு பெருமிதத்தோடு சிரித்தார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பேசிய துர்கா ஸ்டாலின், இந்த புத்தகத்தின் பெரும்பான்மையான வாசகர்கள் தமிழ்நாட்டு பெண்கள் என்றும் தன் புத்தகத்தின் முதல் பாகம் வந்த போது அவர்களின் வீட்டில் ஒருவராக என்னை நினைத்தார்கள், வரவேற்பு கொடுத்தார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

அவர்களே தன்னை இரண்டாம் பாகம் எழுத தூண்டியதாகவும் அவர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். என் கணவர் எப்போதும் சொல்லுவார் உங்களின் ஒருவன் என்று., இப்போது நான் சொல்கிறேன் நானும் உங்களில் ஒருத்தி என்றும் அப்படியே இருக்க விரும்புகிறேன் எனவும் அவர் பேசினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share