லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!
தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஏ. அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற 45 நாட்களில் திடீரெனத் தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஏ. அருண் ஐ.பி.எஸ். அவர்கள், பொறுப்பேற்ற 45 நாட்களிலேயே தார்மீக அடிப்படையில் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் தவெக அரசு புதிய உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுடன் அசுர வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 16 அன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசின் உள்துறை (எஸ்சி) துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன் இ.ஆ.ப. அவர்களின் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் இன்று (ஜூலை 13, 2026) வெளியிட்டுள்ள அரசாணையின் விபரங்கள் பின்வருமாறு:
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராகவும், கூடுதல் காவல்துறை தலைவராகவும் பணியாற்றி வந்த ஏ. அருண் ஐ.பி.எஸ். அவர்கள், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (Tamil Nadu Police Academy) கூடுதல் காவல்துறை தலைவராக/இயக்குநராக (ADGP / Director) நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு-1 (SIC) ஐ.ஜி-யாகப் பணியாற்றி வரும் திருமதி சி. மகேஸ்வரி ஐ.பி.எஸ். அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் (Director of Vigilance and Anti-Corruption) என்ற மிக முக்கியப் பொறுப்பைக் கூடுதல் தார்மீகப் பொறுப்பாக (Full Additional Charge) முழுமையாகக் கவனிப்பார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல் அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதம்!
இதையும் படிங்க: யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!