×
 

ஊட்டி, கொடைக்கானல் லிஸ்டில் இப்போ வால்பாறை.. சுற்றுலாப் பயணிகள் ஷாக்..!!

ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வால்பாறை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாழ் நகரமாகும். ஆனைமலை மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள், அருவிகள், மற்றும் அமைதியான சூழல் ஆகியவை வால்பாறையை பயணிகளின் பேரன்பிற்கு உரிய இடமாக மாற்றியுள்ளன. பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்பாடா... ரிலாக்ஸான பொன்முடி.. சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??

வால்பாறை பகுதிக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய, சோதனை மையங்களை அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா மையங்களில் E-PASS நடைமுறை அமல்படுத்தப்பட்டதைப்போல, வால்பாறையிலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. 

அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம் குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை ஆதீனம் விவகாரம்: நாட்டுல எவ்வளவோ விஷயம் இருக்கு.. இத பெருசாக்கிட்டீங்க.. சென்னை ஐகோர்ட் கருத்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share