முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருளா? - உண்மையை உடைத்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர்...!
முட்டையில் எவ்விதமான நச்சு பொருளும் இல்லை என பல்வேறு துறைகளில் சான்று பெற்ற பின்னரே முட்டைகள், முட்டை பவுடர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், . தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவரும் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவருமான (என்இசிசி) திரு .சிங்கராஜ் தலைமையில் நாமக்கல் லில் இன்று நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் முன்னிலை வகித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிக அளவில், நாமக்கல் மண்டலத்தில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு முட்டைகளும், முட்டை பவுடர்களும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
முட்டையில் எவ்விதமான நச்சு பொருளும் இல்லை என பல்வேறு துறைகளில் சான்று பெற்ற பின்னரே முட்டைகள், முட்டை பவுடர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் பல்வேறு பயோ செக்யூரிட்டி முறைகளை கையாண்டு கோழிகள் பராமரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 55 ஆண்டு கால வரலாற்றிலேயே முதல் முறை... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?
புற்றுநோயை உருவாக்கக் கூடிய ஆண்டிபயாடிக் மருந்துகளை பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு பயன்படுத்துவது இல்லை. ஒரு சில மீடியாக்களில் முட்டை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். வதந்திகளை நம்பாமல் எவ்வித பயமும் இல்லாமல் பொதுமக்கள் வழக்கம்போல் முட்டைகளை சாப்பிடலாம்.
பொதுமக்களின் ஐயத்தை போக்கும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம், நடப்பு வாரத்தில் கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு, முட்டை மாதிரிகளை எடுத்து, பரிசோதனைகள் மேற்கொண்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாவட்டத்தில் சுமார் 800 க்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 300 பண்ணைகளில் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்படும்.
தற்போது வட மாநிலங்களில் குளிர் அதிகமாக உள்ளதால் முட்டை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விற்பனை அதிகரித்து, விலையும் அதிகரித்துள்ளது. மேலும் முட்டை விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் மோடிக்கு விசுவாசமான நாய்; ஜால்ரா அடிக்க மாட்டேன் - அருண் ராஜ்-க்கு அண்ணாமலை பதிலடி