சென்னையில் முக்கிய புள்ளியின் வீட்டை சுத்துப்போட்ட ED... 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை...!
சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது அதிகாலை முதலே தொடர்ந்து வருகிறது.
சென்னை புரசைவாக்கத்தில் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் எட்டு பேர் இரண்டு வாகனங்களில் காலை 7:30 மணி முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக துப்பாக்கி ஏந்திய நான்கு போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது அதிகாலை முதலே தொடர்ந்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அரவிந்த் என்பவரது வீட்டில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இவர் மும்பையில் மருந்து நிறுவனம் நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இவரது ஆடிட்டராக பணியாற்றி வந்த விஜயராகவன் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். விஜயராகவன் இறப்பு தகவல் தெரிய வந்ததும் அவரை சுற்றி விசாரணை நடத்த வந்திருந்த அமலாக்கத்ததுறை அதிகாரிகள் உடனடியாக, அந்த சோதனையை நிறுத்தி திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் அரவிந்திற்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தொழிலதிபர் அரவிந்த் சேட்வீட்டில் துப்பாக்கி எந்திய நான்கு காவலர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு அரவிந்த் பைனான்சியர் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ED வளையத்திற்குள் புதிதாக 3 திமுக அமைச்சர்கள்... திமுகவை சுத்துப்போட்டு கட்டிப்போட பார்க்கும் பாஜக...!
முதற்கட்ட தகவலின் படி சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் நிதி முறைக்கேடு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சோதனை சென்னையில் ஒரே நேரத்தில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கைப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... திமுக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய ஆலோசனை...!
 by
 by
                                    