அதிகாலையிலேயே துல்கர் சல்மான் வீட்டிற்குள் இறங்கிய அமலாக்கத்துறை... சென்னையில் தீவிர சோதனை...!
சென்னையில் நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மலையாள திரையுலகின் உச்சநடிகரான மம்மூட்டியின் வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். வெகுநேரமாக அந்த வீடு வந்து திறக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. சென்னையில் மம்மூட்டிக்கு வீடு இருந்தாலும், அவர் அவ்வப்போதுதான் வருவார். இதனால் அந்த வீட்டினுடைய ஊழியர்களை தேடி கண்டுபிடித்து, கதவை திறந்த பிறகே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் ஏற்கனவே கேரளாவில் உள்ள நடிகர் மம்மூட்டியினுடைய வீடு, அவருடைய மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் வீடு மற்றும் நடிகர் பிரித்விராஜ் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட கார்களை அவர்கள் வாங்கியது தொடர்பாகவும், அதில் முறைகேடு நடந்ததாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. லேண்ட் குரூசர், லேண்ட் ரோயர், டாட்டா எஸ்வி மஹிந்திரா 190க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் காலையிலேயே பரபரப்பு... தொழிலதிபர், மருத்துவர் வீடுகளுக்குள் புகுந்த அமலாக்கத்துறை...!
இந்த வாகனங்களை வாங்கி சட்ட விரோதமாக இந்தியாவிற்கு கொண்டு வந்து, அதை இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் வந்து மறுப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சோதனை வந்து நடந்துள்ளது.
மேலும் நடிகர் துல்கர் சல்மானுடைய வீட்டிலிருந்து ஒரு கார் வந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் அமலாக்க துறையினர் இந்த சோதனைக்காக வந்திருக்கிறார். இதன் அடிப்படையில் வேறேதும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களா? அதற்காக சோதனைக்கு வந்திருக்கிறார்களா? என்பது தொடர்பாக இந்த சோதனை முடிந்த பிறகுதான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! உஷார் மக்களே..!!