×
 

ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ஈரோட்டை தலைமை யிடமாக கொண்ட, 'யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனம், வெங்காயம், உருளை கிழங்கு போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, முதலீடு திட்ட தொழிலை நடத்தியது.

ஈரோடு: ஏற்றுமதி தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பவைத்து நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படும் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த யூனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட வேளாண் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக விளம்பரப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், புதிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துவோருக்கு கூடுதல் கமிஷன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

விசாரணையில், நிறுவனத்தை நடத்தி வந்த நவீன்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சட்டவிரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை, ஈரோடு, கோவை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எட்டு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டிஜிட்டல் ஆவணங்கள், மடிக்கணினிகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி தொடர்பான இந்த வழக்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சண்டை செய்ய காத்திருந்த திமுகவுக்கு ஏமாற்றம்!! 2 நாள் பயிற்சி வீணா?! அறிவாலயம் நம்பிக்கை புஸ்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share