மக்கள் உணர்வ மதிக்கவே மாட்டீங்களா? கல்லறை திருநாளில் எக்ஸாம்! இபிஎஸ் கண்டனம்..!
கல்லறை திருநாளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.
கல்லறை திருநாள், கிறிஸ்தவ மரபில் மிக முக்கியமான ஒரு நினைவு நாளாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக இறந்தவர்களை நினைவுகூரும் நாளாக, குறிப்பாக அனைத்து ஆன்மாக்கள் தினம் என்று அழைக்கப்படுகிறது,
இது நவம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள், இறந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன்னோர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யவும், அவர்களின் நினைவைப் போற்றவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான நேரமாகும்.
இதையும் படிங்க: ஓபிஎஸுக்காக களமிறங்கும் அண்ணாமலை; டெல்லியை நோக்கி மாஸ்டர் பிளான் - இபிஎஸ், நயினாருக்கு காத்திருக்கும் ஷாக்...!
கல்லறை திருநாள், மனித வாழ்வின் நிலையாமையையும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் ஒரு ஆன்மீக நிகழ்வாக விளங்குகிறது.
இந்த நிலையில், நவம்பர் மாதம் 1, 2 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. கல்லறை திருநாள் அன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது என்றும் தெரிவித்தார்.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும் என்றும் ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா., அதனால், பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் திமுக அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்தார்.
உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் கொடுக்கிற சர்டிபிகேட் தேவையில்ல... அமைச்சர் ரகுபதி காட்டம்!