2 நிமிஷம் கூட நிக்கல... இதுவே ஜெ.வா இருந்திருந்தா? நொந்துபோன அதிமுகவினர்..!
எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணத்தின் போது இரண்டு நிமிடம் கூட நிற்காமல் டாட்டா காட்டி சென்றதாக அதிமுக தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் ஓராண்டுக்கு முன்பாகவே மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் ஒவ்வொரு நாளும் மூன்று சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கோவை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்தித்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்திற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பேருந்தில் எடப்பாடி பழனிச்சாமி பலம் வந்தார். பண்ருட்டி பகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரேன் மூலம் பிரம்மாண்ட பலாப்பழ மாலை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுக்கு பள்ளியில் பகுதிகளிலும் பேனர்கள் போஸ்டர்கள் மற்றும் கொடி ஆகியவற்றை வைத்து சிறப்பாக வரவேற்றனர்.
இந்த நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவது என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் கைகளை ஆட்டி டாட்டா காட்டில் சென்று விட்டார். இது கட்சி தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இது தொடர்பாக நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் பேசுகையில், ஒரு வாரமாக கண்விழித்து மிகவும் சிரமப்பட்டு அரங்கம் எல்லாம் அமைத்தோம் என்று பத்து நிமிடமாவது இறங்கி எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்க வேண்டும் எனவும் கூறினர்.
வெயில் என்று கூட பார்க்காமல் உழைத்து மக்களை திரட்டி வேலையை விட்டு குழந்தைகளோடு நிற்கிறோம் மற்றும் ஆனால் இரண்டு நிமிடங்கள் கூட நிற்காமல் போகிறார்கள் எனவும் மனது மிகவும் வலிக்கிறது எனவும் கூறுகின்றனர். இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் நிச்சயம் என்று பேசி இருப்பார் எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!
இதையும் படிங்க: படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்