குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரணும்... சுதந்திர தினத்தில் இபிஎஸ் சூளுரை!
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை பகிர்ந்தார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் நினைவாகவும், ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்தும், இந்த நாள் நாடு முழுவதும் உற்சாகத்துடனும், தேசபக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், எண்ணற்ற தியாகங்களையும், வீரமிக்க போராட்டங்களையும், மக்களின் ஒற்றுமையையும் நினைவுகூரும் ஒரு புனிதமான தருணமாக அமைகிறது.
இந்தியாவின் சுதந்திர தினம், நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை நாடாக உருவெடுத்த நாளை குறிக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: மனசு நிறைவா இருக்கு... வளர்ச்சினா என்ன தெரியுமா? நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின நாளில் சூளுரைத்துள்ளார்.
அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவு கூறுவதாக தெரிவித்தார்.
மேலும், குடும்ப ஆட்சியின் நீட்சியை அகற்ற உறுதியேற்றார். குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும் இந்த நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 79வது சுதந்திர தினம்.. கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!