×
 

#50 YEARS OF RAJINIKANTH! எடப்பாடி பழனிச்சாமி ராஜிகாந்துக்கு வாழ்த்து மழை...

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், பான்-இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி, உலகளாவிய ரசிகர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

கூலி" திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நாகார்ஜுனா (சைமன் என்ற கதாபாத்திரத்தில்), உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் (தயாள் என்ற கதாபாத்திரத்தில்), மகேந்திரன், மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: பாஜகவுக்கு அடுத்த தலைவலி! அடுத்த லிஸ்ட் ரெடி... FIRE MODE-ல் காங்கிரஸ்

இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தயாரிப்பாளராக கலாநிதி மாறன் பணியாற்றியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜூம், இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரும் பணியாற்றியுள்ளனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை கூறியுள்ளார். திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும்,  50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள  தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இப்பொன்விழா ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: அடிதூள்..!! 2026 தேர்தலில் விஜய் களமிறங்கப்போகும் தொகுதி எது தெரியுமா? - விலகியது சஸ்பென்ஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share