×
 

இப்படி ARREST பண்ண குண்டர்களா? நக்சலைட்டுகளா? இன்னும் எட்டு மாசம் தான்.. கதை க்ளோஸ்! EPS ஆவேசம்..!

அறவழியில் போராடிய தூய்மை பணியாளர்களை கைது செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையை வாசலில் தூய்மை பணியாளர்கள் 13 நாட்களாக போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், தனியார் மயமாக்குதலை எதிர்த்து போராடிய தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இருப்பினும் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதை அடுத்து நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அராஜகம் செய்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவின் போது கூட நமது குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி அடித்து நொறுக்கி சிறை வைத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். 

அவர்கள் என்ன சமூக விரோதிகளா, குண்டர்களா அல்லது நக்சலைட்டுகளா என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், அவர்கள் ஏழை எளிய மக்கள் என்றும் சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிமுகவின் அடுத்த விக்கெட்... தங்கமணியும் விலகுகிறாரா? பரபர கருத்து

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் செயல்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டீர்களே அப்போது மட்டும் இனித்ததா என்றும் வாக்குறுதியை கேட்கும் போது மட்டும் கசக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை என்று சாடினார்.

தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தினார். 

மேலும், தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது என்றும் அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை இன்னும் 8 மாதங்கள் தான் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ்க்கு எம்ஜிஆர், ஜெயலலிதா-னு நெனைப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய மைத்ரேயன் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share