லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை... மக்கள் விரோத ஆட்சி... திமுகவை பந்தாடிய இபிஎஸ்..!
லாக்கப் மரணங்களை தடுக்கவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிச்சாமி படும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் மீது நிகிதா என்ற பெண் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் நிலைய வருடங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 2024 மார்ச் மாதம் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த முருகன் என்பவரின் மனைவி மீனாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு, முருகனின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் நீதி வழங்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டது.மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு இதுவரை மீனாவுக்கு அரசு வேலை அல்லது இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த முருகனின் மனைவி மீனாவுக்கு இதுவரை தமிழக அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என வெளியாகும் செய்திகள் வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசால் மற்றும் காவல் துறையால் தனது கணவனை இழந்து மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண் 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மீனாவுக்கான இழப்பீடு அல்லது அரசு வேலை தொடர்பான பதில் முதலமைச்சரிடம் இருந்து வருமா என்றும் கேட்டுள்ளார்.
சமீபத்தில் திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கு அவசரகதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் லாக் அப் மரணங்களை தடுக்க வக்கில்லை என்றும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க மனமில்லை எனவும் சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி, இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி தேவை என கேள்வி எழுப்பினார். லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வெச்ச குறி தப்பாது..! 2026-ல நம்ப தான்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
இதையும் படிங்க: "ப" வகுப்பறை.. என்ன சொன்னாலும் நிறுத்த முடியாது! தமிழக அரசு திட்டவட்டம்..!