×
 

"இதான் DOUBT"..! திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீவிபத்து..! தவெக அரசுக்கு EPS கோரிக்கை..!

நெல்கிடங்கு தீவிபத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக உணவு சேமிப்புக் கிடங்கில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் தற்காலிக சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டது. இந்தத் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் முற்றிலும் கருகி வீணாகியுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. திறந்தவெளியில் நெல் மூட்டைகளை நீண்ட நாட்களாகக் குவித்து வைத்திருந்ததால் தீ ஏற்பட வாய்ப்பு அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை பல நாட்களாக அரிசி மில்களுக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால், அவை ஏற்கெனவே பாழடைந்த நிலையில் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க: AI பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே இனி கட்சிப்பதவி!! கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் ஷாக்!

போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி கிடங்கில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியாகும் நெல்லை பல நாட்களாகத் தேக்கி வைத்து பாழ்படுத்திய பிறகு, அதை மறைக்க செயற்கை தீ விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “இது போன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க, இந்தத் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share