×
 

கரூருக்கு போனீங்களே கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல? நீலி கண்ணீர் வடிக்காதீங்க ஸ்டாலின்... விளாசிய இபிஎஸ்..!

முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நீலி கண்ணீர் வடித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

ராமநாதபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே மத்திய அரசு வேலையாக கொண்டிருக்கிறது என்றும் கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுக்கு கோரிக்கை வைக்க கூட மத்திய அரசு மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் பெயரில் உள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட மாநில அரசு தான் படி அளக்க வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தார். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்றும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

குஜராத், மணிப்பூர், கும்பமேளா ஆகிய இடங்களுக்கெல்லாம் குடுவை அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் குழுவை அனுப்புகிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் மீதான அக்கறை இல்லை என்றும் அடுத்த ஆண்டு தேர்தல் வருவது தான் முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார். இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? என்றும் இதை வைத்து மிரட்டலாமா உருட்டலாமா என நினைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

ஒட்டுண்ணியாக வாழ தான் பாஜக நினைப்பதாகவும், அவர்களோடு அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தலையாட்டி பொம்மையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாஷிங் மெஷின் தான் பாஜக என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!

முதலமைச்சரின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் முதலமைச்சர் ஒரு முறை கண்ணாடியை பார்த்திருக்கலாம் என்றும் அத்தனை கேள்வியையும் அவரை பார்த்து அவரே கேட்க வேண்டியது என விமர்சித்தார். கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் இப்போது நீலி கண்ணீர் வடிக்கிறார் என்றும் கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். வேங்கை வயலுக்கு ஏன் செல்லவில்லை, ஏர் ஷோவில் உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டார்.

இதையும் படிங்க: 41 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. தருமபுரி பிரச்சாரத்தில் விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share