“எங்க கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” - திமுகவை பார்த்து நறுக் கேள்வி கேட்ட எடப்பாடி...!
பாஜக மதவாத கட்சி என திமுக கூட்டணி அவதூறு பரப்புவதாகவும், எங்கள் கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்றும் சரமாரியாக வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி
அதிமுக சார்பில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பிரச்சார பயணத்தை தொடங்கி உள்ளார்.
இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் நின்றபடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சி.அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இதையும் படிங்க: முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...
நாங்கள் கூட்டணி வைத்தோமோ இல்லையோ முதல்வருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதிமுக பாஜக கூட்டணி வைத்ததும் நடுக்கம் வந்துவிட்டது.நாங்கள் யாரோட வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.நல்லது செய்தால் தானே மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கரப்சன் கமிஷன் கலெக்சன்.
பாஜக அதிமுகவை விழுங்கி விடும் என்று கூறுகிறார்கள். என் அருகில் தான் நயினார் நாகேந்திரன் இருக்கிறார் என்ன என்ன விழுங்கியாவிட்டார். மூன்று முறை பெரும்பான்மையாக வெற்றி பெற்ற கட்சி பாஜக.அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைத்ததால் பொறுக்க முடியவில்லை. பாஜக மதவாத கட்சி என திமுக கூட்டணி அவதூறு பரப்புகிறது.
அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக.திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த போதெல்லாம் மதவாத கட்சி என்று தெரியவில்லையா. ஐந்தாவது ஆண்டு காலத்தில் திமுக அடியெடுத்து வைத்திருக்கிறது.காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை நமக்கு எங்கே பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலமாக மாறிவிடும். திமுகவில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு 2026 தேர்தல்.கோவில்பட்டி பகுதியில் சிறுகுறு தொழில்கள் அதிகம்.
நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதை நிறைவேற்றி இருந்தால் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகள் பொன் விளையும் பூமியாக மாறியிருக்கும்.அரசாங்க பணத்தை எடுத்து ஏன் வீண் செலவு செய்கிறீர்கள். உங்கள் பணத்தை எடுத்து நடுக்கடலில் கூட மண்டபம் கட்டுங்கள்.
கருணாநிதி நினைவிடத்தில் 2 கோடிக்கு பேணா வையுங்கள். ஏன் 82 கோடியில் கடலில் பேனா வைக்க வேண்டும். கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு.இதை எல்லாம் பொதுமக்கள் தான் கட்ட வேண்டும். கடன் கொடுத்தவர்கள் விடுவார்களா.திமுக அரசாங்கம் திவால் ஆகிவிட்டது.அரசாங்கம் கடன் வாங்கிவிட்டு பொதுமக்கள் இதை எப்படி கட்டுவார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் இரு கைகள் இல்லாத ஒருவர் என்னை சந்தித்து கைகள் வேண்டுமென கோரிக்கை வைத்தார். மருத்துவ குழுவினர்கள் மூலம் அவருக்கு இரண்டு கைகளும் கொடுத்து இன்று நலமோடு வாழ்கிறார். கைகள் இல்லாதவர்களுக்கு கை கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி.
எங்கள் கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். எங்க கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று கூறி பிரச்சாரத்தை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: விடியா திமுக அரசு! கோவையில் வரும் 5 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்... அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!