×
 

உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி..! நலத்திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ்..!

அரியலூரில் விவசாயிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். மேலும், 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த நிலையில், அரியலூரில் விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும், 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் உழவன் செயலியை அறிமுகம் செய்து, பருத்தி நோய் தாக்குதலின் போது மருந்து அடிக்க பரிந்துரைத்ததாக தெரிவித்தார். மேலும், மரவள்ளி கிழங்கு நோய் தாக்குதலுக்கு, மாவு பூச்சி பயிர்களுக்கு தேவையான மருந்து அடித்து பாதுகாத்ததாக பேசிய இபிஎஸ், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏரிகளை தூர்வாரிய போது வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்பெற்றாக கூறினார்.

இதையும் படிங்க: "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

இதையும் படிங்க: விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share