×
 

ஆட்டம் காணும் எடப்பாடியின் "இரட்டை நாற்காலி"... உலுக்கியெடுக்கும் மூவர் அணி ...!

பொதுச்செயலாளர், இணை பொதுச்செயலாளர் என இரண்டாக இருந்த பதவிகளை ஒன்றிணைத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக மாறினார். அதற்கு பாஜக தயவும், கட்சிக்குள் இருந்த நிர்வாகிகளின் உதவியும் கைகொடுத்தது.

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அடுத்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பது தான் ஒரே டார்க்கெட். ஏனெனில் இதற்கு முன்னாடி அதிமுகவிற்கு இரட்டை தலைமை இருந்த போது, ஓ.பன்னீர்செல்வத்தை கழட்டிவிட்டு கட்சியின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்தார். பொதுச்செயலாளர், இணை பொதுச்செயலாளர் என இரண்டாக இருந்த பதவிகளை ஒன்றிணைத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக மாறினார். அதற்கு பாஜக தயவும், கட்சிக்குள் இருந்த நிர்வாகிகளின் உதவியும் கைகொடுத்தது.

தற்போது அவரை பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் நாற்காலி தான் ஒரே டார்கெட். அது வேணும்னா வலிமையான கூட்டணி அமைய வேண்டும். இப்ப அதிமுக பாஜகா கூட்டணி மட்டும்தான் இருக்கு. இதில் வேறு பஞ்சாயத்து என்னவென்றால் பாஜகவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தவங்களும் ஒவ்வொருத்தரா பிரிந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகட்டும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகட்டும்  பாஜக தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி உடைய அணுகுமுறை பிடிக்காமல் கழன்று வருகிறார்கள். 

சரி அப்ப முதலமைச்சர் நாற்காலிங்கிற கனவு, கனவாக மாறிடுமோ ஒரு பயம் அதிமுகவில் ஏற்பட்டிருக்கு. ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே தேர்தலில் வெற்றி பெற தீர்வு என வி.கே.சசிகலா அழைப்பு விடுத்திருக்கிறார். அவருடன் டிடிவி தினகரனும், ஓபிஎஸும் இணையக் காத்திருக்கிறார்கள். அப்படி எங்களுடன் இணைந்தால் தென்மாவட்டங்களில் எங்கள் மூன்று பேருக்கும் இருக்கக்கூடிய செல்வாக்கை வைத்து அதிமுகவை வெற்றி பெற வைப்பதோடு மட்டுமின்றி, அடுத்த முதலமைச்சராகவும் உங்களையே அமர வைப்போம்.

இதையும் படிங்க: மறுபடியும் இபிஎஸ் பக்கம் போனா சோலி முடிஞ்சிடும்! நல்ல முடிவெடுங்க... செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள்

எங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், முதலமைச்சர் நாற்காலியோடு, பொதுச்செயலாளர் நாற்காலியும் போய்விடும் என எடப்பாடியை எச்சரித்துள்ளார்கள். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்தால் அதிமுகவில் ஏற்படும் அதிருப்தியைப் பயன்படுத்தி, மூவரும் கட்சிக்குள் நுழைந்து பொதுச்செயலாளர் நாற்காலியை டேக் ஓவர் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோ இந்த இரட்டை நாற்காலையும் காப்பாற்றி கொள்ள ரொம்ப கவனத்தோடு காய்களை நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. 

இதையும் படிங்க: பாராட்டு மடலில் தமிழக நிதி கேட்டு ஒருவரை கூட எழுதலையே? இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share