தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!
அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்ட செந்தில் பாலாஜி அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு வந்தவர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியே நம்பாத ஒரு நபர்தான் ஸ்டாலின், அவர் இருக்கும் வரை செயல் தலைவராக மட்டுமே வைத்திருந்தார், அவர் மறைவுக்கு பிறகு தான் ஸ்டாலின் தலைவராக முடிந்தது. திமுகவில் உழைத்தவர்கள் யாருக்கும் பதவி இல்லை. ஆனால் ஸ்டாலின் தனது மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி தந்துள்ளார். குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா.? இது என்ன ராஜ பரம்பரையா..?. எட்டு கோடி பேரை சுரண்டி ஒரு குடும்பம் வாழ்கிறது. அந்த குடும்பத்தை வீழ்த்த வர இருக்கிறது தேர்தல்.
எங்களுடைய கட்சியை நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம், ஆனால் உங்களது கட்சியை காப்பாற்றிக் கொள்ள முடியாது, எங்களிடம் இருந்து வந்தவர் சாதாரண ஆள் கிடையாது..
ஓபிஎஸ் எந்த இடத்திற்கு சென்றாலும் ஆமை புகுந்த வீடு தான். ஓபிஎஸ் புகுந்த கட்சி உருப்படாது. சுயநலவாதிகள் எந்த கட்சியில் இருந்தாலும் அழிவுக்கு தான் செல்லும். அவர்கள் டெபுடேஷனில் திமுகவிற்கு சென்று உள்ளார்கள். செல்லாத காசுகள் எங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை உங்கள் கட்சியில் இணைத்து இருக்கிறீர்கள்.
அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்ட செந்தில் பாலாஜி அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு வந்தவர். இன்று அவரை திமுகவில் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆபத்தை உணராமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள். செந்தில் பாலாஜி மூலமாகத்தான் உங்களுக்கு ஆப்பு அடிக்க போகிறார்கள்.
இதையும் படிங்க: போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!
சிபிஐ க்கு தேவையான தகவலை கொடுத்தால் விடுவித்து விடுவேன் என கூறினால் அவர் காட்டிக் கொடுத்து விடுவார்.. எங்களுக்கு அல்வா கொடுத்தவர் செந்தில் பாலாஜி. அவருக்கு பிரச்சனை வரும்போது யாரை வேண்டுமானாலும் காட்டிக் கொடுப்பார். எனவே ஸ்டாலின் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்டதை போல் எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் கட்சியை காப்பாற்றிக்கொள்ள பாருங்கள்.
இங்கிருந்து வந்தவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் சாதாரண ஆள் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களை கண்டறிந்து நாங்கள் வெளியேற்றினோம் அதனால்தான் அதிமுக வலுமையாக இருக்கிறது களைகள் களையப்பட்டுள்ளன அதிமுக என்ற பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலை தரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: திமுக "குண்டர்கள்" அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!