×
 

இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்... அதிரடியாக அமலுக்கு வரும் முக்கிய விதிகள் என்னென்ன?

அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறவுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே, அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறவுள்ளது. 

இந்நேரத்தில் வேட்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் நேரடியாக மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்.21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் எளிதாக வந்து வாக்களிக்க, வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி, பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். நாளை (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்: 

இதையும் படிங்க: வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

 யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)- ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். 

கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். 

இதையும் படிங்க: 7 சட்ட கல்லூரிகள்.. ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! அதிமுக சாதனைகளை விளக்கிய எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share