×
 

பாமக என்னோடது! தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் தீவிர ஆலோசனை...!

தேர்தல் ஆணையத்தை அணுகி கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக ராமதாஸ் தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.

இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ராமதாசை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் ராமதாஸ். 

இந்த நிலையில், அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் மூலம் சமீப காலங்களில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என கூறினார். பாமகவின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அன்புமணி ஆட்டம் குளோஸ்?... டெல்லி விரையும் ராமதாஸ்... அமித் ஷாவை சந்திக்க திட்டம்...!

கட்சி அலுவலகத்தின் முகவரியை ராமதாசுக்கு தெரியாமல் மாற்றி உள்ளதாக அன்புமணி தரப்பு மீது ஜிகே மணி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். அன்புமணியின் பதவிக்கால முடிந்து விட்டதாகவும் கூறி இருந்தனர்.

இந்த நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸ் தரப்பு பாமகவின் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. தேர்தல் ஆணையத்தை அணுகி கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ராமதாஸ் டெல்லி செல்ல உள்ள நிலையில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி செல்லும் ராமதாஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அன்புமணி தேர்தல் ஆணையத்தையே ஏமாத்திட்டாரு! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share