#BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!
தமிழ்நாடு உள்துறைச் செயலாளரை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 8 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என். முருகானந்தம் ஐஏஎஸ் அதிகாரியை உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக எம். சாய்குமார் ஐஏஎஸ் அதிகாரியை புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது.
அதே நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்ட ஆயுதப் போலீஸ் மற்றும் விழிப்புணர்வு பிரிவின் டிஜிபியாக இருந்த எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் அதிகாரியை அந்தப் பொறுப்பில் நியமித்தது. தற்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை மாற்றி இருந்த நிலையில் தமிழ்நாடு உள்துறைச் செயலாளரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்..!! உத்தரவை எதிர்த்து டி.ஆர்.பாலு கடிதம்..!!
தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கே கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். திமுக பொருளாளர் டி. ஆர் பாலு தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதன் தாக்கம் குறைவதற்குள் தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளரை மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! காரைக்குடியில் குழப்பம்..! சீமான் vs கரும்பு விவசாயி சின்னம்..!