×
 

தேர்தல் நடத்தை விதி... தீவிர சோதனை..!! இதுவரை ரூ.23 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல்..!!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில் இதுவரை 23 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூபாய் 40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும் என்றும் வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்

. தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்திட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை,நி லை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள், 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும்இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை ரூ. 23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இனிமே NO TENSION..! ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்... தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!!

பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share