வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!
வேட்பு மனுக்கள் திரும்ப பெறும் காலம் முடிந்த நிலையில், இன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் கட்டம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 30 அன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 7 அன்று, தேர்தல் அதிகாரிகள் அனைத்து மனுக்களையும் விரிவான பரிசீலனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசீலனையின்போது, மனுக்களில் உள்ள தகவல்கள், ஆவணங்கள், கையொப்பங்கள், வயது, தகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன. சில மனுக்கள் தொழில்நுட்ப குறைபாடுகள், தகுதியின்மை அல்லது பிற காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.
ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெற கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்தது. இன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மயிலாப்பூரில் மாற்றத்தின் அலை..! தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வாக்குச் சேகரிப்பு..!!
இந்த பட்டியலில், வேட்புமனு ஏற்கப்பட்டு, திரும்பப் பெறப்படாத வேட்பாளர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்த கட்சி அல்லது சுயேட்சை அந்தஸ்து, தொகுதி விவரங்கள் ஆகியவை இடம் பெறும். இந்த இறுதி பட்டியல் தான் தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படையாக அமையும். இதன் பின்னர், வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: வெற்றி விசிலுக்கே..! ஓட்டுக்கு 10 ஆயிரம்... பகல் கனவு பலிக்காது..!! ஆதவ் விளாசல்..!!