விறுவிறு SIR... ஆறு கோடி பேருக்கு விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்...!
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 6 கோடி வாக்காளர்களுக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!
இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மிக தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் 5,90 கோடி பேருக்கு இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 94.47% பேருக்கு விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 6 கோடி வாக்காளர்களுக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "ஆப்பு வச்சிட்டியே சிவாஜி..." - பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்... உளறிக் கொட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்...!