×
 

“தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

தமிழக வெற்றி கழகத்தினர் வைத்திருந்த ஏராளமான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 75 ஆயிரம்  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மூன்று கண்காணிப்பு குழு மற்றும் ஒன்று பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படை இரண்டாவது குழு கூட்டுறவு இணைப்பதிவாளர் பொன்மாரி தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அன்னம்மாள் மகளிர் கல்லூரி   அருகே வாகன  சோதனையில் ஈடுபட்ட போது  திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் எந்தவித ஆவணமும் இன்றி 74.800  ரூபாய் பணம் இருந்தது.


அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சரியான தகவலை தராததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.   தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கண்காணிப்பு வாகனம் ஒன்றின் அலுவலர்கள்
தூத்துக்குடி பிரையண்ட  நகர் பகுதியில்  தமிழக வெற்றி கழக சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம் நின்றதை பார்த்ததும் வாகனத்தின் அருகே உள்ள கட்டிடத்திற்கு உள்ளே சென்று   சோதனை செய்தபோது அங்கு தமிழக வெற்றிக்கழகம் என அச்சடிக்கப்பட்ட  ஏராளமான மஞ்சப்பைகளும், ஏராளமான பரிசுப் பொருட்கள் மற்றும் ஏராளமான விசிலும்  இருந்தன. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை... திமுகவின் இமாலய சாதனை..! தவெக காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share