×
 

தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.! 4051 வேட்பாளர்கள் போட்டி..!

தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி தொகுதியிலும் குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியிலும் வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். மொத்தமாக 234 தொகுதிகளிலும் 4,051 வேட்பாளர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கின்றனர். வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதிகபட்சமாக கரூரில் 79 வேட்பாளர்கள் மற்றும் குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னையில் 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்களும், திருவண்ணாமலையின் எட்டு தொகுதிகளில் 156 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதேபோல் திருவள்ளூரில் 16 தொகுதிகளில் 160 வேட்பாளர்கள், காஞ்சிபுரத்தின் நான்கு தொகுதிகளில் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

செங்கல்பட்டியின் ஏழு தொகுதிகளில் 131 வேட்பாளர்களும், ராணிப்பேட்டை நான்கு தொகுதிகளில் 65 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் 65 வேட்பாளர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் 79 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் 74 வேட்பாளர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியின் நான்கு தொகுதிகளில் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் 132 வேட்பாளர்களும் கடலூர் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் 127 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளர்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் 166 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் 18 பேரும், அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் 34 பேரும் களமிறங்கி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் 30 பேர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று தொகுதிகள் சேர்த்து 45 பேர் போட்டியிடுகின்றனர்.  

இதையும் படிங்க: எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share