×
 

45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தியாகராய நகர் தொகுதி வேட்பாளர் ஆனந்த் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என். ஆனந்த், தேர்தல் பணிகளின் ஒரு முக்கிய அங்கமாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னையின் மையப் பகுதியான தியாகராய நகர் தொகுதி, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

இங்கு தவெகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், கழகப் பொதுச் செயலாளருமான என். ஆனந்த் அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வாக்குகளைத் திரட்டி வருகிறார்.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சூழலில், தியாகராய நகர் தொகுதிக்கு என். ஆனந்தை வேட்பாளராக அறிவித்தது கழகத்தின் உள் நிர்வாகிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலமாக கழகத்தின் அர்ப்பணிப்புள்ள உழைப்பாளியாகவும், புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படும் என். ஆனந்த், தொகுதியின் பல்வேறு வட்டங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தமிழக வெற்றி கழகத்தின் துண்டறிக்கையை கொடுத்து விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: விசிலு ஜெயிக்கணும்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக மருமகள், பேரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!

இந்த நிலையில் ஆனந்த் தனது வாக்குறுதியாக, 45 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் பலர் வசித்து வருவதாகவும், தங்களிடம் பட்டா போன்ற விஷயங்களை தான் மக்கள் பெருமளவில் முன்வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே தாங்கள் வெற்றி பெற்றவுடன் 45 ஆண்டு காலமாக பட்டா வசதி பெறாமல் இருப்பவர்களுக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தருமபுரியில் விஜய் ROAD SHOW நடத்த அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் ஏமாற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share