×
 

2030ம் ஆண்டுக்குள் உலகப்போர் நடக்கும்! 5 வருஷம் தான் இருக்கு!! அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!

2030ம் ஆண்டுக்கள் உலகப்போர் நடக்கும் என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெட்ராய்ட்: உலக அரசியல் பதற்றம், போதைப்பொருள் கடத்தல், காலநிலை மாற்றம் என பல்வேறு சவால்கள் நடுவே, உலகப்போர் 2030-க்குள் நிச்சயம் நடக்கும் என்று எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக எச்சரித்துள்ளார். 

“போர் தவிர்க்க முடியாதது. 5 ஆண்டுகளில் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகளில் நடக்கும்” என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் DOGE (Department of Government Efficiency) தலைவராக பணியாற்றியதால் மஸ்கின் இந்தக் கருத்து, உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்து பிரபலமானவர். டிசம்பர் 1 அன்று, ஹண்டர் ஆஷ் (@ArtemisConsort) என்ற பயனர் ஒரு பதிவில், “உலகப்போர் அச்சுறுத்தல்கள் இல்லாததால் அரசுகள் செயலற்றுப் போயுள்ளன. இதனால் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது” என்று கூறியிருந்தார். 

இதையும் படிங்க: நாசாவை வழிநடத்தும் அதிகாரி! எலான் மஸ்க் கூட்டாளிக்கு முக்கிய பதவி!! ட்ரம்ப் புது ரூட்!

இதற்குப் பதிலாக மஸ்க், “போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும். அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்” என்று பதிலளித்தார். இந்தப் பதிவு, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, ஆயிரக்கணக்கான கருத்துக்களை ஈர்த்துள்ளது.

மஸ்க் தனது கருத்தை விரிவாக விளக்கவில்லை. ஆனால், இது உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், சீனா-தைவான் பதற்றம், அமெரிக்காவின் வெனிசுவலா தாக்குதல் அச்சுறுத்தல் போன்ற தற்போதைய உலக நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக எக்ஸ் பயனர்கள் விவாதித்து வருகின்றனர்.

“எலான் ஏன் 2030 என்று கூறினார்? AI போர் அல்லது காலநிலை போரா?” என்ற கேள்விகள் ட்ரெண்ட் ஆகியுள்ளன. சிலர், “இது டிரம்பின் DOGE பணியுடன் தொடர்புடையதா?” என்று கேட்கின்றனர். மஸ்க் DOGE தலைவராக அரசு செலவுகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், அவரது இந்த எச்சரிக்கை அரசியல் அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மூலம் மார்ஸ் காலனி திட்டத்தை முன்னெடுக்கும் தொழிலதிபர். “மனித இனம் பூமியில் மட்டும் இருந்தால் ஆபத்து. போர் போன்ற சவால்களைத் தாண்டி, பல கிரகங்களில் வாழ வேண்டும்” என்று அவர் அடிக்கடி கூறி வருகிறார். 

2024 தேர்தலில் டிரம்பை ஆதரித்த மஸ்க், DOGE தலைவராக நியமிக்கப்பட்டு அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்கும் பணியாற்றினார். இந்தப் பின்னணியில் அவரது போர் எச்சரிக்கை, உலக அரசியல் வல்லுநர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: சும்மா விட்ராதீங்க! “திரிணமுல் வன்முறைக்கு பதிலடி கொடுக்குங்கள்!” எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share