×
 
☰

#BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!

போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்பட்ட விவகாரத்தில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த த.வெ.க. செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேரும் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக அளவில் போதை அடிமைத்தனத்தை ஏற்படுத்தக்கூடிய உயர்தர செயற்கை போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்பட்ட விவகாரத்தில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை 7 மணியளவில் அவர்களது வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, நாள் முழுவதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர்கள் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: 23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

அங்கு த.வெ.க. நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரிடமும் நள்ளிரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, பூபாலனின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோ எடை கொண்ட 27 மூட்டைகளில் இருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டார்கள், இதற்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர்கள் யார், போதைப்பொருள் எந்த நாட்டுக்குக் கடத்தப்பட இருந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 11 மணியளவில் விசாரணை முடிவடைந்ததாகவும், நான்கு பேரும் தஞ்சாவூரில் உள்ள போதைப்பொருள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 100 கிலோவுக்கும் அதிகமான உயர்தர போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகி ஒருவர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share