இதுக்குதான் அமித்ஷாவை சந்தித்தேன்! ஹப்பாடா... ஒரு வழியா சொல்லிட்டாரு பா... மௌனம் கலைத்த EPS
டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி எதற்காக அமித் ஷாவை சந்தித்தேன் என விளக்கம் அளித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியோடு இணைந்து அதிமுக சந்திக்க உள்ளது. தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சில உட்கட்சி பிரச்சனைகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதிமுகவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பாஜக தான் காரணம் என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். நேற்று மதியம் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் கலந்துரையாடினார்.
பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையான செங்கோட்டையன் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்து இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து நேற்று சந்தித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!
அப்போது, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக தெரிவித்தார். இருப்பினும் அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷாவிற்கு நோ சொல்லப்போகிறாரா? - பரபரக்கும் அரசியல் களம்...!