மீண்டும் TTV, OPS...! என்டிஏ கூட்டணி குறித்து இபிஎஸ் உடன் பாஜக தலைகள் தீவிர ஆலோசனை...
எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மீண்டும் உருவாகியுள்ள கூட்டணி முக்கிய பேசு பொருளாக உள்ளது. இந்தக் கூட்டணி, 2023 செப்டம்பரில் முறிந்த உறவை மீண்டும் புதுப்பித்து, தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவும் பாஜகவும் கடந்த காலங்களில் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், 2023 செப்டம்பரில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் மறைந்த தலைவர்களான ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்ததாகக் கூறி, அதிமுக இந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தன.
இந்த நிலையில், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் டெல்லியில் சந்தித்தார். எடப்பாடி பழனிச்சாமி அமித் உஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நிர்வாகிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயே நான் தான் இளிச்சவாயன்! நொந்துபோன அண்ணாமலை
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பாஜக மேல் இட பொறுப்பாளர் அரவிந்த் மேனனும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த பிறகு முதன்முறையாக நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். என் டி ஏ கூட்டணி விவகாரங்கள் தொடர்பாகவும், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி! திமுகவை எதிர்த்தால் பாஜக கைக்கூலி... என்னயா உங்க நியாயம்? - சீமான்