கள்ளச்சாராயமும், கரூர் சம்பவமும் ஒன்னா? என்ன பேசுறீங்க இபிஎஸ்... முதல்வர் காரசார வாதம்
கள்ளச்சாராயமும், கரூர் சம்பவமும் ஒன்று அல்ல என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்ற வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்திருந்தார். இதனிடையே, ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் பேட்டி அளித்தது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிகாரிகள் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தால் விசாரணை எப்படி சரியாக இருக்கும் என்றும் கூடுதல் எஸ்.பி தலைமையில் விசாரணை நடக்கும் போது கூடுதல் டிஜிபி கருத்து சொல்வது சரியா எனவும் கேள்வி எழுப்பினார். கிட்னி முறைகேடு வடக்கில் அரசு அவசரம் காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஆணையம் அமைத்த பிறகு அதிகாரிகள் பேட்டி அளிப்பது அவமதிக்கும் செயல் என்றும் எதற்கு இந்த செய்தியாளர் சந்திப்பு என்றும் கேட்டார்.
மற்ற இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போது செல்லாத முதலமைச்சர் கரூருக்கு மட்டும் சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்டதால் அங்கு செல்லவில்லை என்று முதல்வர் விளக்கம் அளித்தார். கரூர் துயரத்தில் உயிரிழந்த அனைவரும் அப்பாவிகள், மிதிபட்டு இறந்தவர்கள் என்றும் அவர்களுக்காக சென்றதில் என்ன தவறு எனவும் கேட்டார்.
இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!
அதிகாரிகள் அரசியல் ரீதியாக பேசவில்லை என்றும் அலுவல் ரீதியாக பேசினர் எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு முதல்வர் தொடர்ந்து பதில் அளித்து வந்த நிலையில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அதிரப்போகும் தமிழக சட்டப்பேரவை... அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை...!