×
 

வாக்குரிமை பறிப்பில் இபிஎஸ் பாட்னர்... மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க! EPS- ஐ பந்தாடிய அமைச்சர் ரகுபதி...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்

சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது.

51 கோடி வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக எஸ் ஐ ஆர் பணியை ஆதரித்து உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி விமர்சித்து உள்ளார். வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் சதியில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு பார்ட்னர் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: பதவியைக் காப்பாற்ற நயினார் நாகேந்திரன் எதையும் பேசுவார்... பாஜகவிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

மக்கள் நலன் பற்றி துளியும் கவலையின்றி டெல்லி எஜமானர்கள் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்வதாக எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டும் இன்றி தமிழர்களின் வாக்குரிமையை பறிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: பட்டாக்கத்தி TO வெடிகுண்டு... அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு... விளாசிய EPS...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share