அதிமுகவின் அலங்கார தேவதை EPS... ஆஹா ஓஹோ என புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி...!
அதிமுகவின் அலங்கார தேவதை எடப்பாடி பழனிசாமி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்தார். ஒரு சாமானியன், ஒரு விவசாயி தமிழகத்தை ஆள்வதா என்றும் அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக இருப்பதா எனவும் பலர் வழக்கு மேல் வழக்கு போட்டார்கள் என்றும் நீதிமன்றம் சென்றார்கள் எனவும் தேர்தல் ஆணையத்திடம் சென்றார்கள் என்றும் கூறினார்.
ஆனால், எம்.ஜி.ஆர் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும், மக்களின் அன்பும் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகலாம் என தீர்ப்பு வந்தது என்று தெரிவித்தார். இன்னமும் அவரை ஒடுக்கிவிட வேண்டும், விரட்ட வேண்டும் என நினைக்கின்றனர் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, எல்லாவற்றையும் தகர்த்து மக்களைக் காப்பேன், தமிழகத்தை மீட்பேன் என வெற்றிப் பயணம் செய்து வருகிறார் எனவும் புகழ்ந்தார்.
இதையும் படிங்க: முகத்தை துடைத்தது ஒரு குத்தமா?... திமுகவை வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி...!
பல சூழ்ச்சிகள், பல பிரச்சனைகள், உள்ளே இருந்து குழி பறிப்பது, வெளியில் இருந்து குழி பறிப்பது என அத்தனையையும் தகர்த்து எறிந்து அதிமுகவின் அலங்கார தேவதையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு அந்த தகுதியில்லை; விஜய்க்கு அதுக்கு அருகதை இல்ல.... கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி...!