×
 

"தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக"..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பரப்புரை தீவிரமடைந்து உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். 

அதன்படி, சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகத் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் திமுக குடும்பத்திற்கான கட்சி என்றும் தெரிவித்தார். கடந்த முறை திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும் கூறினார். அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறி சங்ககிரியில் இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

இதையும் படிங்க: இனிமே இந்த இபிஎஸ் வேற மாதிரி இருப்பேன்..! பரப்புரையில் எடப்பாடி எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share