×
 

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும் என்றார்.

கழகத்தின் தற்போதையை நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான K.S. மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து என்னுடைய மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறது என்று கூறினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள்தான், சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியை கண்டவர்கள். வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். கழகம் தோல்வியை கண்டு துவண்டு விடுவதுமில்லை என்று கூறினார். அந்தவகையில், கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்நிலையில் இருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share