×
 

அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

குற்றவாளிகளுக்கு திமுக அரசு துணை போவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம், ஜெயபிரகாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாத நாட்களே கிடையாது என்று தெரிவித்தார். இரண்டு வயது குழந்தையை பாலியல் கொலை செய்தவர் திமுகவை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டினார். பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் பழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குமாரபாளையத்தில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் இந்த கொடுமை நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜெயக்குமார் மற்றும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும் இந்த இரு வழக்கிலும் தற்போது வரை உண்மை குற்றவாளிகளை பிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். விளாத்திகுளத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை வழக்கில் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!

குற்றவாளிகளுக்கு திமுக அரசு துணையாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டார் என்றும் பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையாக இருக்கிறது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share