"ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர் தெரியுமா..?"..! எடப்பாடிக்கு வருத்தம்..! புதுவை அன்பழகன் பேட்டி..!
ஸ்டாலின் தோல்வி அடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி வருந்தினார் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி தமிழ்நாடு அரசியலில் சிறப்பான இடத்தைப் பெற்றது. 2008-ல் வரையறைக்குப் பின் உருவான இந்தத் தொகுதி, 2011 முதல் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாக இருந்து வந்தது. மூன்று முறை (2011, 2016, 2021) ஸ்டாலின் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் அதிமுகவின் ஆதி ராஜாராம் உடன் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், இந்தத் தொகுதியை தனது அரசியல் செல்வாக்கின் சின்னமாகக் கருதினார்.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைமை மாறியது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் V.S. பாபு போட்டியிட்டு, ஸ்டாலினைப் பின்னுக்குத் தள்ளி ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
V.S. பாபு தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி. 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவுடன் தொடர்பு கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காததால், 2026 பிப்ரவரி 7-ல் தவெகவில் இணைந்தார். தவெகவின் இணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 75 வயதான இவர், கொளத்தூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஸ்டாலினை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு அதிமுக ஆதரவா? மாறும் அரசியல் களம்! எடப்பாடி பழனிசாமியுடன் என்.ஆனந்த் சந்திப்பு!
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருந்தியதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறினார். “ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர் தெரியுமா..?” என கூறி வருந்தினார் என்று தெரிவித்தார். அரசியல் மாண்பு உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கட்சியை காப்பாத்துவாரா எடப்பாடி! இறங்கி அடிக்கும் விஜய்! தவெகவுக்கு ஆதரவளித்தால் மட்டுமே அதிமுக பிழைக்கும்?!