போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!
அதிமுகவின் தொண்டர்கள் துணை இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடனான இரு நாள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் தொடங்கியது. இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் அதிமுகவுக்கு மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய அளவில் தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், தேர்தல் முடிவுகளின் பின்னணி மற்றும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், சமீப காலமாக அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைவது போன்ற சவால்களையும் இந்தக் கூட்டத்தில் கையாள்வது எதிர்பார்க்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணிக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு வேலூர் மாநகர் மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது. நாளை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள், காலை 11.30 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள், மாலை 4.30 மணிக்கு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடைபெறும்.
இதையும் படிங்க: "கட்சியை காப்பாற்ற களமிறங்கிய எடப்பாடி"..! தோல்விக்கு என்ன காரணம்..? EPS முக்கிய ஆலோசனை..!!
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறியுள்ளார். எல்லோருக்கும் உரிய பங்களிப்புடன், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றார். கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் போகட்டும்., தொண்டர்கள் இருக்கும் கட்சி அதிமுக என கூறிய அவர், அவர்கள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?