தப்பான ஆளுக்கு ஓட்டு போட்டுடாதீங்க..! இளம் வாக்காளர்களுக்கு EPS வேண்டுகோள்..!!
இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளம் வாக்காளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வரும் சூழலில், வாக்காளர்களை நேரடியாக அணுகும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ செய்தி ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தொடக்கத்தில் இருந்தே உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார்.
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை நினைவூட்டும் விதமாக அவர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் இது என்று உறுதியுடன் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைக் காப்பாற்றும் இறுதி யுத்தம் இது..! வன்முறை காடாக மாறிய மாநிலம்..! EPS குற்றச்சாட்டு..!
முதல்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளம் வாக்காளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் தவறான நபருக்கு ஓட்டு போட்டால் அடுத்த தலைமுறையையும் சீரழித்து விடும் என்று எச்சரித்துள்ளார். தவறான நபரை தேர்வு செய்து விடாதீர்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நமக்காக பிரசாரம் பண்ணுறாங்க!! பிரேமலதாவுக்கு நன்றி!! உண்மை உறங்காது என அடித்து ஆடும் இபிஎஸ்!