×
 

திக்.. திக்.. அரசியல் களம்..! மூத்த நிர்வாகிகளுடன் EPS தீவிர ஆலோசனை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அரசியல் களம் தீவிரமடைந்தன. இந்த நிலையில் அதிமுகவின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை “ரிசார்ட் அரசியல்” என அழைக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் சென்னைக்குத் திரும்பியது மேலும் புதிய ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றன.

விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மைக்கு முயற்சி எடுத்து வந்த நிலையில், அதிமுகவின் எம்எல்ஏக்கள் புதுச்சேரியின் பூர்ணாங்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்ற வருகிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவா என்பது குறித்து திருமாவளவன் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் எடப்பாடியார் ஆட்சி..! நல்லதே நடக்கும்… தம்பிதுரை நம்பிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share