தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!
திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது இறுதிக் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் பயணம் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 10 முதல் 14 வரை காவேரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதாகும். திருச்சி மற்றும் திண்டுக்கல் பகுதிகள் தேர்தல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை வரலாற்று ரீதியாக பல தேர்தல்களில் தீர்மானகரமான பங்கு வகித்துள்ளன.
இதையும் படிங்க: அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...!
ஈபிஎஸ் இங்கு உள்ளூர் பிரச்சினைகளான விவசாயம், தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து பேச உள்ளார். மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு அவரது அரசு காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைவூட்டி, மக்கள் ஆதரவைப் பெற முயல்கிறார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!