×
 

திமுக கதை க்ளோஸ்! 2026ல் மக்கள் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. எடப்பாடி பழனிச்சாமி உறுதி..!

வேளாண் விரோத ஆட்சியை நடத்தும் திமுகவிற்கு 2026 இல் முடிவுகட்ட மக்கள் உறுதியாக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். 234 தொகுதிகளையும் அடக்கிய இந்த பயணத்தில் ஜூலை ஏழாம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்தி வருகிறார். மேலும் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளடோரை சந்தித்து கலந்துரையாடுகிறார். அவர்களின் குறைகளை கேட்டறியும் இ பி எஸ், வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள் மற்றும் திமுக அரசின் பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துரைத்து வருகிறார். நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மைக்கான நீர் மேலாண்மை அதிமுக அரசு சிறந்து விளங்கியதாகவும் தெரிவித்தார்.

விவசாய மக்களுக்காக நன்மை தரும் ஒரு திட்டமாவது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். தினமும் காலையில் போட்டோ ஷூட் நடத்திய நாட்களை முதலமைச்சரின் வீணடித்து விட்டார் என்றும் போட்டோ ஷூட் மூலம் 50 மாத காலத்தை ஓட்டிவிட்டார் முதலமைச்சர் எனவும் விமர்சித்தார்.

இந்த நிலையில் தனது சுற்றுப்பயணம் தொடர்பாக கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி, காவிரியும், அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்தாறுகளும் பஞ்சரத்தின கீர்த்தனை போலவே பாய்ந்தோடும் திருவையாறு சென்றிருந்ததாக கூறினார். 

இதையும் படிங்க: சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

 காவிரியின் நீர்நிலைகளைத் தூர்வாரி, நடந்தாய் வாழி காவிரி எனப் போற்றியது அதிமுக அரசு என்பதை அந்த தொகுதி மக்கள் நினைவில் கொண்டுள்ளதாக கூறினார். வயல்வெளியில் கான்க்ரீட் ரோடு போட்டு போட்டோஷூட் நடத்திய போலி விவசாயி நடத்தும் வேளாண் விரோத ஆட்சிக்கு 2026-ல் முடிவுகட்டுவோம் என மக்கள் உறுதியோடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதுதாங்க ஸ்டாலின் ஆட்சி... மக்களோடு மக்களாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட திமுக எம்.எல்.ஏ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share