×
 

டெல்லி வரை சென்ற குதிரை பேர விவகாரம்! அமித் ஷாவிடம் பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!!

குதிரை பேர விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசியல் களம் தேர்தலுக்கு முன்பாகவே பரபரப்பாகி வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முக்கியமான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை த.வெ.க., தரப்பு அணுகி வருவதாக கூறப்படும் ‘குதிரை பேரம்’ விவகாரம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷாவை, விமான நிலையத்தில் பழனிசாமி சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை த.வெ.க., தரப்பு தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

சமீபத்தில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.,வில் இணைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அந்த ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே விஜய்யின் அரசியல் திட்டம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், அ.ம.மு.க., எம்.எல்.ஏ., காமராஜ் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக அளித்ததாக கூறப்படும் புகார் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரத்திலும் டெல்லி மேலிடத்தில் சிலர் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக செயல்படுவதாக பழனிசாமி அதிருப்தி தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், அ.தி.மு.க.,வுக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்தும் அமித் ஷாவிடம் அவர் எடுத்துரைத்ததாக தகவல்.

குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக த.வெ.க., தரப்பின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், பழனிசாமியின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி கணக்குகளையும், எம்.எல்.ஏ.,க்களின் நகர்வுகளையும் சுற்றி அரசியல் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share