×
 

நெருங்கும் தேர்தல்... முனைப்பு காட்டும் அதிமுக..! பிப்.21 முதல் மீண்டும் EPS சுற்றுப்பயணம்..!

வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது கட்சி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், ஏற்கெனவே 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் தொடங்கிய அவரது தொடர் பிரசாரப் பயணத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது புதிய கட்டமாகவோ இந்த சுற்றுப்பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை மாவட்டத்திலிருந்து தொடங்கிய அவரது மாநில அளவிலான சுற்றுப்பயணம் பல கட்டங்களாகத் தொடர்ந்து வந்தது. பல்வேறு மாவட்டங்கள், சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்து, திமுக ஆட்சியின் தோல்விகளைச் சுட்டிக்காட்டி, அதிமுகவின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்து வந்தார். இப்போது பிப்ரவரி 21 முதல் மீண்டும் இதுபோன்ற ஒரு தீவிர பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.

கட்சியினருக்கு புதுப்பொலிவு அளிப்பதாக உள்ளது.இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதுதான். குறிப்பாக கிராமப்புறங்கள், நகர்ப்புற ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டறிந்து, அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை தெளிவுபடுத்துவதற்கு இது உதவும்.

இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

மேலும், கட்சியின் அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தி, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவதும் இதன் இலக்குகளில் ஒன்று. வரும் 21ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் தொடங்கும் நிலையில் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி 21ஆம் தேதி ஆவடி, அம்பத்தூரிலும், பிப்ரவரி 22 ஆம் தேதி மாதவரத்திலும், பிப்ரவரி 25ஆம் தேதி மதுரவாயல், பூவிருந்த வல்லியிலும், பிப்ரவரி 26 ஆம் தேதி தாம்பரம், பல்லாவரத்திலும் பிரச்சாரம் நடத்துகிறார். 

இதையும் படிங்க: ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share