×
 

மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சி... ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பரப்புரை..!!

ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் இணைந்து வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், பழனிச்சாமி தனது கூட்டணி வேட்பாளர்களுக்காக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் பாஜகவுடன் தொடர்பைத் துண்டித்திருந்த அதிமுக, 2026 தேர்தலுக்காக மீண்டும் என்டிஏவில் இணைந்தது. பழனிச்சாமி தலைமையில் அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிட உள்ளது, பாஜகவுக்கு 27 இடங்கள், பாமகவுக்கு 18 இடங்கள், அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற சிறிய கட்சிகளுக்கும் இடங்கள் பகிரப்பட்டுள்ளன. 

அதிமுக மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடத்தி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

இதன் தொடர்ச்சியாக, ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகாலம் அதிமுகவின் சிறப்பான ஆட்சி நடந்ததாக தெரிவித்தார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட மூக்கு மேல் விரல் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வாக்குக்காக ஆட்சி செய்யவில்லை என்றும் மக்களுக்காக ஆட்சி செய்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெருஞ்சோகம்...!! - எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share