×
 

கள்ளக்குறிச்சி சிலிண்டர் விபத்து - அரசின் அலட்சியத்தால் நேரிட்ட கொடூரம்! அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல்!

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பொது இடங்களில் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்யாத திமுக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்று திருவிழாவில் பலூனுக்கு எரிவாயு நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் நிகழ்ந்த கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே பலூன்களுக்கு கேஸ் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும், ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைகள் துண்டிக்கப்பட்டும், படுகாயமடைந்தும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மரணப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சோகச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய விடியா அரசின் மெத்தனப் போக்கால்தான் இத்தகைய அசம்பாவிதங்கள் தொடர்கதையாகி வருகின்றன" எனச் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணன் மரணத்திற்கு நீதியே இல்லை.. 50 லட்சம் நிவாரணம் கொடுங்க! இபிஎஸ் கடும் கண்டனம்!

தொடர்ந்து அவர் தனது அறிக்கையில், "இந்தக் கொடூர விபத்தில் கைகளை இழந்து தவிக்கும் இளைஞர்களுக்கும், படுகாயமடைந்துள்ள 10-க்கும் மேற்பட்டோருக்கும் அரசு மருத்துவமனைகளில் போர்க்கால அடிப்படையில் உயர்தரச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தலா ₹5 லட்சம் நிவாரண நிதியாகத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இது போன்ற பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களைத் திருவிழா பகுதிகளில் பயன்படுத்துவதைத் தடுக்க இனிமேலாவது அரசு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், எடப்பாடியாரின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “முருகன் மீது திமுகவுக்கு என்ன கோபம்?” திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share